1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (16:16 IST)

தாயையும், மகளையும் மாறி மாறி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞன்!

தாயையும், மகளையும் மாறி மாறி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞன்!

டெல்லியில் விதவை பெண் ஒருவரையும் அவரது மகளையும் மாறி மாறி பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக துரிதமாக கைது செய்துள்ளனர்.


 
 
டெல்லி, கோகுல் பூர், அமர் காலனியை சேர்ந்த கணவனை இழந்த விதவை பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக 25 வயது ஆசிஸ் என்ற இளைஞன் அவரது வீட்டு முகவரியை கேட்டு வாங்கியுள்ளான்.
 
அவர் விதவை என்பதும், அவருக்கு இளம் வயதில் ஒரு பெண் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்ட அந்த இளைஞன் முகவரி வாங்கிய அடுத்த நாளே அவரது வீட்டுக்கு சென்று அந்த விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளான்.
 
மீண்டும் சில தினங்களுக்கு பின்னர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை பலாத்காரம் செய்துவிட்டு அவரது மகளையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளான். இப்படி தொடர்ந்து தாயையும், மகளையும் மாறி மாறி பலாத்காரம் செய்து வந்துள்ளான் அந்த இளைஞன்.
 
இந்நிலையில் இதுகுறித்து அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளிக்க மறுநாளே காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த இளைஞர் மீது பலாத்காரம், குழந்தை மீதான அத்துமீறல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.