1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (23:12 IST)

இளம் பெண் வீடியோ கால் செய்து மிரட்டல்...வாலிபர் தற்கொலை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி கோட்டா என்ற பகுதியில் வசித்து வந்தவர் முரளி(19). இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

ஈவர் பேஸ்புக்கில் அதிக நேரல் செலவழித்து வந்த  நிலையில்,  ஒரு இளம் பெண் இவருக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

அவருடன் பழக்கம் ஏற்படவே சில நாட்களில் வீடியோ காலில் பேச்சில், இவரை நிர்வாணமாக மார்பிங் செய்து, முரளிக்கு அனுப்பி, தான் கேட்கும் பணத்தை அனுப்ப வேண்டுமென மிரட்டியுள்ளார்.

இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த முரளி, தான் பணம் தர முடியாது என கூறியுள்ளார். பின்னர் அப்பெண் மீண்டும் மிரட்டல் விடுக்கவே, முரளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.