திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:32 IST)

SANTA கொடுத்த சிறந்த பரிசு: காதலனை அறிமுகமப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்!

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங்.  தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையான இவர் தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். தொடர்ந்து இந்தி சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். 
 
இந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களுக்கு தனது அழகான காதலனை அறிமுகப்டுத்தியிருக்கிறார், அந்த பதிவில், சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார். அது நீங்கள் தான்.. மகிழ்ச்சி ப்டேய்ய்ய் என் அன்பே. நீ யாராக இருந்தாலும், என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் நிரப்பியதற்கு நன்றி. 
 
என் அமைதியான காரணியாக இருந்ததற்கு நன்றி. எனக்குத் தெரியும் நீங்கள் எவ்வளவு உந்தப்பட்டு இருக்கிறீர்கள், நீங்கள் விரும்பும் அனைத்தையும் வெல்ல விரும்புகிறேன்.. எப்போதும் கன்னத்துடன் சிரித்துக் கொண்டே இருங்கள் என கூறி போட்டோ வெளியிட்டுள்ளார்.