1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (12:30 IST)

சுஷ்மா சுவராஜிக்கு நெருக்கடி : சிறுநீரக தானம் செய்ய முன் வந்த வாலிபர்

சுஷ்மா சுவராஜிக்கு நெருக்கடி : சிறுநீரக தானம் செய்ய முன் வந்த வாலிபர்

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜிக்கு, அவரது குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தாத நிலையில், அவருக்கு சிறு நீரக தானம் செய்ய ஒரு வாலிபர் முன் வந்துள்ளார். 


 

 
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில், அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதும், அதனால் அவரின் சிறுநீரகம் செயல் இழந்து போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து, தற்போது அவருக்கு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுஷ்மா சுவராஜே தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று காலை வெளியிட்டிருந்தார்.
 
இந்நிலையில், நிரந்தர தீர்வாக, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சுஷ்மா சுவராஜ் பி பாசிட்டிவ் (B+) ரத்த குரூப்பை சேர்ந்தவர். எனவே, அதே பிரிவுடைய, அவரது குடும்பத்தினர் சிலரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். ஆனால், யாருடையதும் அவரது பிரிவோடு ஒத்துப்போக வில்லை.
 
எனவே, மற்றவர்களிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


 

 
இந்நிலையில், ராகுல் வர்மா என்ற சமூக ஆர்வலர், சுஷ்மா சுவராஜிக்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானம் கொடுக்க முன் வந்துள்ளார். “ மரியாதைக்குரிய சுஷ்மா சுவராஜ். என்னுடைய ரத்த பிரிவு பி பாசிட்டிவ். தேவைப்பட்டால், உங்களுக்கு என்னுடைய சிறுநீரத்தை தானம் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.