வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஜூலை 2018 (21:07 IST)

என்ன கட்டிப்பிடிப்பதற்கு முன் 10 முறை யோசிங்க ராகுல்: யோகி அறிவுரை!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார். 
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையை பிடித்து தன் அருகே அழைத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார்.  
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முக்கியமாக ராகுல் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது பலரை கவர்ந்தது. இந்நிலையில் இது குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பேசியுள்ளார். அவர் குறியது பின்வருமாறு...
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்னும் வளர வேண்டும். அவர் குழந்தை போல செயல்படுகிறார். இதுபோன்ற அரசியல் சாகசங்களை மக்கள் நம்ப கூடாது. இதை அனுமதிக்கவும் கூடாது. 
 
எந்த ஒரு அறிவுள்ள மனிதரும் இன்னொரு நபரை இப்படி கட்டிப்பிடிக்க மாட்டார். ராகுல் மோடியை எளிதாக கட்டிபிடித்துவிட்டார். ஆனால் அவர் என்னை அப்படி கட்டிபிடிக்க முடியாது. என்னை கட்டிப்பிடிக்கும் முன் ராகுல் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.