1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (16:16 IST)

முதுகெலும்பு 'டமால்' ஆட்சி.! உடனுக்குடன் கொள்ளையடிக்கும் மாடல்.! தமிழகத்தை விளாசிய பாஜக.!!

BJP Speaker
இண்டியா கூட்டணியினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு இனிக்கும் வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் என்றும் முதுகெலும்பு 'டமால்' ஆட்சிக்கு வந்த பின்னர் விலைவாசியை உயர்த்தி சாமானிய மக்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், கர்நாடகாவைத் தொடர்ந்து தற்பேது தமிழ்நாடும் ‘உடனுக்குடன்’ கொள்ளையடிக்கும் மாடலை வெளிப்படுத்தி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம், தேர்தலுக்கு முன் இனிக்கும் வாக்குறுதிகளை அளித்தன என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு சாமானிய மக்கள் மீது வரிகளை விதித்து, விலைவாசியை உயர்த்தி, அவர்களின் முதுகெலும்பை உடைத்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
 
தமிழ்நாட்டில் தற்போது மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3-வது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று  ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே திமுக அரசு சொத்து வரியையும் குடிநீர் வரியையும் உயர்த்தி உள்ளது என்றும் பால் விலையையும் உயர்த்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 
தமிழ்நாட்டிலும் அரசு ஊழல் மிகுந்ததாக உள்ளது என்றும் சொந்த நலனுக்காகவே ஆட்சி நடக்கிறது என்றும் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது என்றும் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா குற்றம் சாட்டியுள்ளார்.