1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 ஜனவரி 2022 (08:29 IST)

சுகாதார பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்! – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு!

உத்தரபிரதேச ஆஷா துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் 80 ஆயிரம் ஆஷா துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் படிக்க, எழுத கற்றுக் கொள்ளவும், ஆவணங்களை எளிதாக மாநில அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதற்கான நிதி மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.