திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (12:01 IST)

அதி தீவிர புயலாக மாறும் யாஸ்... மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தற்போது மேலும் வலுவடைந்து இன்று காலை தீவிர புயலானது.
 
இது மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறுவதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை துறையின் தேசிய முன்னறிவிப்பு மையம், மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது நாளை மதியம் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.