1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (13:02 IST)

அதிகரித்து வரும் மஞ்சள் காய்ச்சல்! தடுப்பூசி கட்டாயம்! – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் தொற்றினால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சல் என்ற காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் இந்த மஞ்சள் காய்ச்சலுக்கு தனிப்பட்ட சிகிச்சை எதுவும் கிடையாது. நோயின் அறிகுறிக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மஞ்சள் காய்ச்சல் அதிகரித்து வருவதால் இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்பவர்களும், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்த தடுப்பூசியை செலுத்தி 10 நாட்கள் கழித்தே குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு செல்ல முடியும். அதுபோல இந்தியாவிற்குள் வருபவர்களும் தடுப்பூசி செலுத்தி 10 நாட்கள் கழித்தே இந்தியாவுக்குள் நுழையவும் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K