1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (12:55 IST)

அறுவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற நோயாளி.. மின்கம்பத்தில் மோதியதால் கருகி பலி..!

அறுவை சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சுலோச்சனா என்ற நோயாளி சென்ற நிலையில் அவர் சென்ற ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதியதை அடுத்து ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததாகவும் அதில் அந்த நோயாளி கருகி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் சுலோச்சனா என்ற 57 வயது பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தார். 
 
இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி தீ பிடித்தது. இதில் பெண் நோயாளி, ஓட்டுநர், மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருந்த நிலையில் மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் நோயாளி சுலோச்சனா மட்டும் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran