வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (13:11 IST)

மோர் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்! அமுல் நிறுவனத்திற்கு புகார்! - அதிர்ச்சி வீடியோ!

Amul

பிரபல அமுல் நிறுவன மோர் பாக்கெட்டில் புழு நெளிந்த வீடியோ ஒன்றை வாடிக்கையாளர் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனமாக அமுல் நிறுவனம் உள்ளது. சமீபத்தில் கஜேந்தர் யாதவ் என்பவர் அமுல் நிறுவனத்தின் மோர் சாஷேக்கள் உள்ள பெட்டி ஒன்றை ஆன்லைன் மூலமாக வாங்கியுள்ளார்.

அதை பிரித்தபோது அந்த பெட்டி முழுவதும் வெள்ளைப்புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை உடனடியாக வீடியோ எடுத்த அவர் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அமுல் நிறுவனத்தை டேக் செய்துள்ளார். அதில் அவர் “அமுல் பொருட்களை ஆன்லைனில் வாங்குவதை நிறுத்த வேண்டும். அமுல் உங்கள் புரதச்சத்து நிறைந்த மோர் உடன் புழுக்களையும் அனுப்பியுள்ளீர்கள். சமீபத்தில் நான் வாங்கிய மோரில் புழுக்கள் இருப்பதை கண்டு எனது அதிருப்தியை வெளிப்படுத்தவே இதை எழுதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் அமுல் நிறுவனத்திற்கே புகார் மெயில் அனுப்பிய நிலையில், அமுல் நிறுவனத்தில் இருந்து அவரிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K