திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 20 பிப்ரவரி 2020 (18:09 IST)

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி....மக்கள் ஆச்சர்யம் !

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி

பொதுவாகவே இந்த உலகில் வித்தியாசமாக உள்ள படைப்புகள், உயிரினங்கள் எல்லாமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகின்றன. அந்த வரிசையில் கர்நாடகாவில் சித்ரதுர்கா என்ற பகுதியில் ஒரு தாய் ஆடு ஒரு குட்டியை ஈன்றது. அது இரட்டைத் தலையுடன் இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 
கர்நாடக மாநிலம் - சித்ர துர்கா என்ற பகுதியில் ஒரு விவசாயி வீட்டில் ஆடு வளர்த்து வந்தனர். இந்நிலையில் அந்த தாய் ஆடு ஒரு குட்டியை ஈன்றது. ஆனால் வழக்கமான ஆடாக இல்லாமல், இரட்டைத் தலையுடன் குட்டி பிறந்தது தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள் அனைவரும் விவசாயி வீட்டிற்கு வந்து அந்த இரட்டைத் தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக் குட்டியைப் பார்த்துவிட்டு செல்கின்றனர்.