வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (12:33 IST)

'லிவ் இன்' முறையில் காதலுடன் வசித்து வந்த பெண் துண்டுதுண்டாக வெட்டி படுகொலை!

maharashtra
மஹாராஷ்டிர மாநிலத்தில் 'லிவ் இன்' காதலுடன் வசித்து வந்த பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மிரா- பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி வித்யா(3வயது). இவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசசித்து வரும் தன் காதலர் மனோஜ் ஷைனி( வயது) என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

சரஸ்வதியும், மனோஜும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில்,அடுக்குமாடி குடியிருப்பின் 7 வது மாடியில் சரஸ்வதியின் சிதைந்த உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் படுகொலை செய்யப்பட்டு உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து  அவர்கள் துண்டுதுண்டான சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் படுகொலை பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்டமாக லிவ் இன் காதலர் மனோஜை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.