லெனின் அகத்தியநாடன்|
Last Modified ஞாயிறு, 8 மே 2016 (13:34 IST)
கோவாவில் 16 வயது சிறுமியை, எம்.எல்.ஏ.வுக்கு விற்பனை செய்த ஏஜெண்ட், போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் அடானாசியோ மான்சராட்டே என்ற பாபுஷ். இவர், செயிண்ட் க்ரூஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் நேபாளத்தை சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
அந்தச் சிறுமி, பாபுஷிடமிருந்து தப்பி, பனாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாபுஷ் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.