நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்
மதுக்கடையில் வேலை பார்ப்பதாக கூறுவதற்கு ஆண்கள் பலரே வெட்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பெண் ஒருவர் துணிச்சலாக மதுபானக்கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதிலும் அவர் மதுபான விற்பனையாளர் பிரிவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கேரளாவில் மதுக்கடை வேலைக்கு எட்டு பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் பெண்களை மதுபானக்கடையில் வேலை பார்க்க அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அரசு வேலையில் ஆண், பெண் என்ற பேதம் பார்க்ககூடாது என்று தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் எட்டு பெண்களுக்கு மதுபானக்கடையில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டது. இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்பவர் முதலில் வேலைக்கான ஆர்டரை பெற்று பணியை தொடங்கிவிட்டார்.