1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூலை 2023 (18:26 IST)

எடைக்கு எடை துலாபாரமாக தக்காளி சமர்ப்பித்த பெண் பக்தர்: காஸ்ட்லி வேண்டுதல்..!

பொதுவாக தெய்வங்களுக்கு துலாபாரம்  தருவதாக பக்தர்கள் வேண்டி கொள்வார்கள் என்பதும் எடைக்கு எடை பல பொருள்களை காணிக்கையாக அளிப்பார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எடைக்கு எடை துலாபாரமாக தக்காளியை சமர்ப்பித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனக்காபள்ளியில் உள்ள நூக்கலாம்மன் என்ற கடவுளுக்கு தனது எடைக்கு எடை அதாவது 51 கிலோ எடைக்கு துலாபாரமாக தக்காளியை அந்த பெண் பக்தர் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.  
 
இது குறித்த புகைப்படம் மற்றும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு கிலோ தக்காளி 150  முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வரும் நிலையில் இது மிகவும் காஸ்ட்லியான வேண்டுதல் என்று  பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva