புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூன் 2020 (00:17 IST)

நண்பர்களுக்கு மனைவியை இரையாக்கிய கணவன் – குழந்தைகள் முன்பு தாய்க்கு நடந்த கொடூரம்!

தன் மனைவியை குடிக்கவைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் கணவர் ஒருவர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 25 வயது பெண். அவருக்கு திருமணமாகி 5 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் மனைவியையும் இரண்டு மகன்களையும் நண்பர்கள் வீட்டுக்கு சுற்றுலா என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மனைவியை வலுக்கட்டாயமாக மது குடிக்கவைத்துள்ளார். அதன் பின் கணவரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அவரது உடலில் சிகரெட்டுகளால் சூடு வைத்தும் கொடுமைப் படுத்தியுள்ளனர். இது அனைத்தும் அந்த பெண்ணின் இரு குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது.

தொடர் பாலியல் வல்லுறவால் அந்த பெண் மயக்கமடைய அங்கேயே விட்டுவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் மயக்கம் தெளிந்து அங்கிருந்து வெளியேறி இளைஞர் ஒருவரின் உதவியால் போலீஸார் மற்றும் ஊடகங்களுக்கு தனக்கு நடந்த கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணின் கணவர் உள்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.