முத்தம் கொடுக்க வந்த இளைஞனின் நாக்கைக் கடித்த பெண் – தப்பித்து போலிஸில் புகார் !

Last Modified திங்கள், 29 ஜூலை 2019 (14:16 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்டாக்ஸியில் தவறாக நடந்துகொள்ள முயன்ற நபர்களிடம் இருந்து ஒரு பெண் சமயோஜிதமாக தப்பித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக கால் டாக்ஸி புக் செய்துள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் அந்த கால்டாக்ஸி வரவே அதில் இரண்டு பேர் கூடுதலாக இருக்க அவர்களைத் தனது நண்பர்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால் அந்த பெண் டாக்ஸியில் ஏற சிறிது நேரத்துக்குப் பின் அந்த நபர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளனர். அதில் ஒருவர் அந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவரை முத்தமிட முயல அந்தப்பெண் அவரின் நாக்கைக் கடித்து துப்பியுள்ளார். இதனால் அவர் வலியில் துடிக்க டிரைவர் காரை நிப்பாட்ட அங்கிருந்து அந்தப் பெண் தப்பித்து போலிஸில் புகார் அளிக்க சம்மந்தப்பட்ட நபர்களைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :