1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (16:57 IST)

50 வயதுக்கு மேலயா? அப்ப ஆதாரம் காட்டு -சபரிமலையில் பரபரப்பு (வீடியோ)

சபரிமலைக்கு சென்ற ஒரு பெண்ணை அடையாள அட்டை வைத்து வயது தெரிந்த பின்பே அவரை கோவிலுக்குள் போராட்டக்காரர்கள் அனுப்பி வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் நேற்று மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. ஆந்திர  மாநிலத்தை சேர்ந்த மாதவி, மற்றும் பாத்திமா என்ற இரு பெண்கள் திருப்பு அனுப்பப்பட்டனர். இதனால் சபரிமலையில் நேற்று பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனையடுத்து தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
 
இந்நிலையில், ஒரு பெண் இருமுடி சுமந்து தனது குடும்பத்தினருடன் சபரிமலையில் ஏறிக்கொண்டிருந்தார். அவரை பார்த்த போராட்டக்காரர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திரும்பிப் போ என கத்தினர். ஆனால், தனக்கு 52 வயது ஆகிறது எனக்கூறி அதற்கான அடையாள அட்டையை அவர் காட்டவே, அப்பெண்ணை தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர்.
 
இந்த வீடியோவை பெண் சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் வலைத்தளங்களில் வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.