1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (10:18 IST)

Block செய்யப்படும் ஆப்ஸ்... பட்டியலில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம்?

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் மத்திய அரசின் ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்படாததால் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் புதிய விதிகளுக்கு இணங்காமல் உள்ளது. 
 
எனவே, மத்திய அரசு புதிய விதிகளுக்கு இணங்காமல் இருக்கும் செயலிகள் (டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் )மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் இச்செயலிகள் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.