திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:35 IST)

நடத்தைமேல் சந்தேகப்பட்ட கணவன் – மனைவி விதித்த கொடூர தண்டனை

மகாராஷ்டிராவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் மனைவி கணவனைக் கட்டுப்போட்டு கொதிக்கும் எண்ணெய்யை அவர் மேல் ஊற்றியுள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த தம்பதிகள் குயின்சியா மற்றும் பவிஷ்யா. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்க, இவர்களது வாழ்க்கையில் பூகம்பமாய் வந்துள்ளார் குயினின் நண்பர் நாயக் என்பவர் மூலம் வந்துள்ளது. நாயக் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்ல பவிஷ்யாவுக்கு அவர்கள் இருவர் மேலும் சந்தேகம் அதிகமாகியுள்ளது. தனது மனைவிக்கும் நாயக்குக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக எண்ணிய பவிஷ்யா குயினை தினமும் சித்ரவதைப் படுத்தியுள்ளார்.

இந்த கொடுமைகளைப் பற்றி குயின் தன் உறவினர்கள் மற்றும் கணவரின் உறவினர்களிடம் எடுத்து சொல்லியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒருக் கட்டத்தில் சித்ரவதைகளைப் பொறுக்க முடியாத குயின் ஒருநாள் நாயக்கை போன் செய்து வர சொல்லி தன் கணவரின் கால்களையும் கண்களையும் கட்டி, மிளகாய் பொடியை வீசி சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். அதிலும் ஆத்திரம் அடங்காத அவர் கொதிக்கும் எண்ணெயை அவர் மேல் கொட்டியுள்ளார்.

இதனால் வலியில் பவிஷ்யா அலற அக்கம்பக்கத்தினர் போலிஸுக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குயின் மற்றும் நாயக்கைக் கைது செய்துள்ளனர்.