1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:32 IST)

இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்த கணவர்.. ஆணுறுப்பை கடித்த மனைவி கைது..!

இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்த கணவனின் ஆணுறுப்பை மனைவி கடித்ததை எடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராம் பிரகாஷ் என்பவர் தனது மனைவியிடம் இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்ததால் மனைவி ஆத்திரம் அடைந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இது குறித்து இருவருக்கும் சண்டை வந்த நிலையில் இயற்கைக்கு மாறான உறவு வைத்துக் கொள்ளே ஆக வேண்டும் என்று ராம் பிரகாஷ்  கட்டாயப்படுத்தி உள்ளார். 
 
இதனை அடுத்து கோபத்தில் ராம் பிரகாஷ்  ஆணுறுப்பை அவருடைய மனைவி கடித்து காயம் செய்து விட்டதாகவும் இதில் படுகாயம் அடைந்த ராம் பிரகாஷ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் ராம் பிரகாஷ் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில்  காவல்துறை இது குறித்து விசாரணை செய்து மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ராம் பிரகாஷ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ஒருவேளை அவர் இறந்து விட்டால் மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva