1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (08:35 IST)

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏன் தடுப்பூசி போட முடியாது: மருத்துவர்கள் விளக்கம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டமிட்ட நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்னரே அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது
 
இந்த நிலையில் இது சாத்தியமில்லை என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் 18 வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டுமே போடப்படும் உரிமை பெற்று உள்ளது என்றும் ஆனால் பெரும்பாலான பிளஸ் டூ மாணவர்கள் 18 வயதிற்குள் அதாவது 17 17.5 வயது தான் இருப்பதால் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்றும் கூறியிருக்கின்றனர் 
 
பொதுத்தேர்வுக்கு முன் 12ஆம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து 18 வயதுக்குள் போட அனுமதிக்கப்படும் தடுப்பூசியை இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது