செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (18:40 IST)

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. முதல்வர் நாற்காலிக்காக போட்டி போடும் 3 தலைவர்கள்..!

மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் மகாராஷ்டிரா மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மூன்று தலைவர்கள் முதல்வர் நாற்காலிக்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தவ் தாக்கரே டெல்லி சென்று தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் தயக்கம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன, மேலும் சரத் பவார் மற்றும் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பிரிதிவிராஜ் சர்மா ஆகியோர்களும் முதல்வர் நாற்காலிக்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
 
கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்த சிவசேனா, தேர்தலுக்குப் பின்னர் கூட்டணியை முறித்துக் கொண்டு உத்தவ் தாக்கரே,  காங்கிரஸ் ஆதரவுடன் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது உத்தவ் தாக்கரேவை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva