திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (16:11 IST)

இந்திய விமானத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி : பின்னணி என்ன ..?

கொல்கத்தாவில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஜெட் விமானத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக செல்போனில் ஒரு பயணி பேசிகொண்டிருந்தார். 
இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து  மும்பை விமான நிலையத்தை நோக்கி செல்ல தயார் நிலையில் இருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் அமர்ந்திருந்த யோக்வேதாந்தா பொடார் என்ற இளைஞர் செல்போனில் அருகே உள்ளவர்களுக்கு அச்சுறுத்தும் விதமாக வன்முறை தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார்.
 
விமானத்தை நடுவானில் தகர்க்கப் போவதாக அவர் மிரட்டல் விடுக்கவே...சக பயணி ஒருவர் இது சம்பந்தமாக விமான ஊழியர்களிடம் தகவல் கொடுத்தார்.
 
அப்போதே அந்த நபர் போலீஸாரால்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றன.