வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 ஜனவரி 2022 (07:41 IST)

மற்றொரு மேற்குவங்க பிரபலமும் பத்ம விருதை ஏற்க மறுப்பு!

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா அவர்கள் இந்த விருதை ஏற்க முடியாது என அறிவித்திருந்தார்
 
இந்த நிலையில் மற்றொரு மேற்குவங்க பிரபலம் பத்ம விருதை ஏற்க விரும்பவில்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்றைய பத்ம விருதுகள் அறிவிப்பு பிரபல வங்காள எழுத்தாளர் சந்தியா முகர்ஜி அவர்களுக்கு  பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த விருதைத் தான் ஏற்க விரும்பவில்லை என சந்தியா முகர்ஜி தெரிவித்துள்ளார் 
 
90 வயதான தமக்கு விருது வழங்குவது தம்மை அவமதிப்பது போல் இருப்பதாகவும் எனவே இந்த விருதை அவர் ஏற்க விரும்பவில்லை என்றும் அவருடைய மகள் சௌமி சென்குப்தா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த விருதை நிராகரிப்பது எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கெளரவிப்பதை எதிர்ப்பதற்காக இந்த விருதை பெற மறுப்பதாகவும் சந்தியா முகர்ஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது