1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (20:00 IST)

வாரத்திற்கு 2 நாட்கள் முழு பொதுமுடக்கம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை விட அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தமிழகத்திலும், டெல்லி மகாராஷ்டிரா மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதன் பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி இருக்கும் பொது மக்கள் மீண்டும் முழு பொதுமுடக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டால் பெரும் சிக்கலுக்கு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் வாரம் இரண்டு நாட்கள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் அம்மாநில மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது