1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (15:49 IST)

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்டு குடும்பமே பலியான சோகம்! – அதிர்ச்சி வீடியோ!

Pune Waterfalls
மகாராஷ்டிராவில் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குடும்பமே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ள நிலையில் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனவாலா மலைப்பகுதியில் அருவியில் சுற்றுலா பயணிகள் பலரும் குளித்துள்ளனர்.

அப்போது திடீரென அருவியில் வெள்ளம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொண்ட குடும்பம் அந்த அருவியில் சிக்கிக் கொண்டுள்ளனர். நகர்ந்தால் வழுக்கி விடும் என அவர்கள் அசையாது நீண்ட நேரம் நின்ற நிலையில், தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் தடுமாறி வெள்ளத்தில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். இதை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் தகவலின்படி, இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் நடந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இறந்த 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K