1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (07:54 IST)

இன்னும் சில நிமிடங்களில் வாக்கு எண்ணிக்கை: 2 மாநிலங்களையும் கைப்பற்றுமா பாஜக?

vote
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில் 168 தொகுதிகளுக்கும் இமாச்சல பிரதேசத்தில் 82 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன 
 
ஏற்கனவே இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் வெளிவந்துள்ள மீண்டும் குஜராத், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பாஜகவை பொருத்தவரை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருந்தாலும் இந்த இரண்டு கட்சிகளும் பெரிய அளவில் தொகுதிகளை பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva