திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:10 IST)

நீதிபதிக்கு எதிராக சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர்..!

நீதிபதிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறிய தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியதை எடுத்து அவர் மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த வன்முறை குறித்து வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்ட இருவரை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு எதிராக தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னி கோத்திரி தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜரான விவேக் அக்னிஹோத்ரி றி நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். இதனை அடுத்து இந்த வழக்கிலிருந்து அவரை நீதிபதிகள் விடுவித்தனார்.
 
Edited by Mahendran