செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (21:46 IST)

கேரளாவில் போர்வைகளை இலவசமாக கொடுத்த தெரு வியாபாரி

கேரளாவில் கனமழையினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்தவர்களுக்கு தெரு வியாபாரி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த போர்வகளை இலவசமாக கொடுத்துள்ளார்.

 
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகள் அனைத்தையும் , உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கிய சம்பவம் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளது. 
 
அப்பகுதி தாசில்தாரிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விஷ்னுவின் விருப்பத்தை மாவட்ட கூடுதல் நீதிபதி முகமது யூசுப்பிடம் தெரிவித்த தாசில்தார் திவாகரன், விஷ்னுவின் போர்வைகளை முகாமிற்கு எடுத்து செல்வதற்கான வாகன உதவியை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.
 
அதன்படி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  37 குடும்பங்களை சேர்ந்த 122 பேருக்கு தான் விற்பனைக்காக வைத்திருந்த கம்பளி போர்வைகளை விஷ்னு தானமாக வழங்கினார். 
 
இதற்காக அவரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.