நல்லாசிரியர் விருதுகளை அறிவித்த மத்திய கல்வி அமைச்சகம்: தமிழகத்தில் 2 பேர் தேர்வு

நல்லாசிரியர் விருதுகளை அறிவித்த மத்திய கல்வி அமைச்சகம்
siva| Last Updated: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (21:38 IST)
நல்லாசிரியர் விருதுகளை அறிவித்த மத்திய கல்வி அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருதுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் சற்று முன்னர் மத்திய கல்வி அமைச்சகம் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகளை அறிவித்துள்ளது

நாடு முழுவதும் மொத்தம் 47 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்

விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திலீப் என்பவரும் சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சரஸ்வதி என்பவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர் திலீப் மற்றும் ஆசிரியை சரஸ்வதி ஆகிய இருவருக்கும் கல்வி அமைச்சகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :