திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2024 (16:23 IST)

பாஜகவில் இணைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்! தேர்தலில் போட்டியா?

Vijender Singh
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருக்கும் அரசியல்வாதி இன்னொரு கட்சிக்கும் தாவி வருவதும் திரை உலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாகும்.

அந்த வகையில் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இதுநாள் வரை இருந்த நிலையில் அவர் திடீரென விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளார். அவர் அனேகமாக மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்ற விஜேந்தர் சிங். இவர் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நிலையில் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்துள்ளார்

கடந்த 2019 ஆம் ஆண்டு தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த விஜேந்தர் சிங், மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளார்.


Edited by Siva