1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:23 IST)

இந்தியாவில் சேவையை தொடங்க உள்ள பிகினி ஏர்லைன்ஸ்

பிகினியில் பணியாற்றும் பணிப்பெண்களை கொண்ட வியட்ஜெட் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவில் தனது சேவையை தொடங்க உள்ளது.

 
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வியட்ஜெட் ஏர்லைன்ஸ் தனது சேவையை இந்தியாவில் தொடங்க உள்ளது. விமான நிறுவனங்களில் வித்தியாசமான சேவையை வழங்கி பெயர் பெற்றது வியட்ஜெட். இதில் பணிப்பெண்கள் பிகினி உடையில் பணிகள் செய்து வருகின்றன. 
 
வியட்நாம் தலைநகரில் இருந்து புதுடெல்லிக்கு நேராக விமான சேவை இல்லாத நிலையில் வியட்ஜெட் இந்த சேவையை வழங்க உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இந்த விமான நிறுவனத்தின் பிகினி சேவை அனுமதிக்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.