திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (15:48 IST)

பெங்களூர் டூ வடகொரியா: ஓலாவில் வொர்ல்டு டூர்...

ஓலா கேப்ஸ் மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த போக்குவரத்து சாதனமாகவும் உள்ளது. இந்நிலையில் திடீரென ஓலா வாடிக்கையாளர்களுக்கு மெயில் ஒன்று வந்துள்ளது. அந்த மெயில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
பெங்களூரில் ஓலா பயன்படுத்தும் நபர்கள் வெளிநாடு செல்ல டாக்சி முன்பதிவு செய்வதாக புகார் எழுத்து இருக்கிறது. மேலும், அதிகமாக ஓலா பயன்படுத்தும் சிலருக்கு நீங்கள் இந்த நாட்டிற்கு செல்ல ஓலா புக் செய்து இருக்கிறீர்கள் என்று மெயில் வந்துள்ளது. 
 
இந்த மெயிலோடு கட்டண தொகையும் அனுப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு இவர்கள் முன்பதிவு செய்ததாக புகார் வந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். 
 
இதன் பின்னர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஓலா வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என்றும், போனை சுவிட்ச் ஆஃப் செய்து ஆன் செய்யும் படி ஓலா தரப்பில் கூறியுள்ளனர்.