வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (08:54 IST)

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் பயங்கரவாத அமைப்புகள்: சி.ஐ.ஏ அறிவிப்புக்கு கண்டனம்

வி.ஹெச்.பி என்று கூறப்படும் விஸ்வ இந்து  பரிஷத்  மற்றும் பஜ்ரங் தள்  ஆகிய இரண்டு அமைப்புகளும் மத ரீதியிலான பயங்கரவாத அமைப்புகள் என்று அமெரிக்க அரசின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அரசின் உளவு அமைப்பான, சி.ஐ.ஏ. ஏற்கனவே பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது 'வேர்ல்ட் பேக்ட்புக்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் உலகின் பல்வேறு அமைப்புகள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இயங்கி வரும்  விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய இந்து அமைப்புகள், 'மதவாத, தீவிரவாத அமைப்புகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிஐஏ வின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் தங்கள் அமைப்பு குறித்த கருத்தில் பயங்கரவாதம் என்ற வார்த்தையை நீக்காவிட்டால் சி.ஐ.ஏ.வுக்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடத்தப்படும் என- வி.ஹெச்.பி அறிவித்துள்ளது. இதுகுறித்து வி.ஹெச்.பி., செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:  ''சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ள தகவல்கள் போலியானவை. ''இதுகுறித்து, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தவறான தகவலை கூறியதற்கு, சி.ஐ.ஏ., மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் உலக அளவில் சிஐஏக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.