திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2019 (09:02 IST)

வாகன விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்: அதிர்ச்சி தகவல்

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஹரியானாவைச் சேர்ந்த இருவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். 
 
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தினேஷ் மதன் என்பவரை நிறுத்திய காவலர்கள், அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். தன்னிடம் எந்த ஆவணங்களும் இல்லை என தினேஷ் மதன் கூற இதனையடுத்து அவருக்கு போக்குவரத்து போலீஸார் 23 ஆயிரம் ரூபாய் விதித்தனர். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் மதன், தன்னுடைய வாகனத்தின் மதிப்பே 15 ஆயிரம் ரூபாய் என்றும், 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இதேபோல் அமித் என்ற வாகன ஓட்டிக்கும் இதே காரணத்திற்காக ரூ. 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகனத்தின் பதிவு சான்றிதழ் இல்லாதது, காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியது, தலைக்கவசம் அணியாதது ஆகிய காரணங்களுக்காக அபராதம் பலமடங்கும் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிகிறது
 
இதே நிலை தொடர்ந்தால் யாரும் வாகனத்தில் செல்ல மாட்டார்கள் என்றும்  ஓலா போன்ற வாடகை நிறுவனங்களின் வாகனங்களை பயன்படுத்தி கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது பலமடங்கு அபராதம் விதிப்பது புதியதாக வாகனங்கள் வாங்க நினைப்போர்களை யோசிக்க வைத்துள்ளது