இத செய்யலனா தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்க கூடாது: வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!!

Last Modified ஞாயிறு, 13 ஜனவரி 2019 (17:18 IST)
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதற்கு மிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் அனுமதி இல்லாமல் அணை கட்ட கூடாது என கூறிவிட்டது.
 
இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தால் தமிழர்கள் யாரும் கர்நாடகாவில் கால் வைக்கக்கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ்  நேற்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :