புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (18:22 IST)

வைகோ பேச ... பிரதமர் மோடி மேசையை தட்ட ... மாநிலங்களவையில் ஆரவாரம் !

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  23 ஆண்டுகளுக்கு பின்னர் ,திமுக சார்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழில் உறுதிகூறி  பதவிபிரமாணம் செய்து கொண்டார்.
 
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுள்ள நூற்பு ஆலைகள் குறித்த வினாவின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோம் துணைக்கேள்வி எழுப்பி பேசினார். அதில், 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநிலங்களவையில் கன்னி உரையாக எனது முதல் கேள்வி வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி என்று தெரிவித்தார்.
 
இவ்வாறு வைகோ கூறிய பின்னர், பாரத பிரதமர் மோடி தன் இருக்கையில் அமர்ந்தவாறு மேசை தட்டி வைகோவின் பேச்சை வரவேற்றார்.
 
இந்தியாவின் 9 பிரதமர்களை சந்தித்து பாராளுமன்றத்தையே தன் பேச்சால் நடுநடுங்கச் செய்த வைகோவுக்கு பாராளுமன்ற புலி என்ற பெயரும் உண்டு.