1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2024 (13:42 IST)

கட்சி கணக்கில் இருந்து ரூ.50 கோடியை எடுத்துக்கொண்டாரா உத்தவ் தாக்கரே? திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

தேர்தல் கமிஷன் சிவசேனா கட்சியை ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கிய பிறகு கட்சி கணக்கிலிருந்து உத்தவ்  50 கோடி ரூபாய் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான கட்சிதான் உண்மையான சிவசேனா என தேர்தல் கமிஷன் அறிவித்தது. அது மட்டுமின்றி சிவசேனா சின்னத்தையும் அந்த பிரிவுக்கே கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு ஷிண்டே தரப்பினருக்கு வந்த நிலையில் தற்போது தேர்தல் கமிஷன் அறிவித்த சில நிமிடங்களில் 50 கோடி ரூபாயை உத்தவ் கட்சி பணத்தில் இருந்து தனது வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஷிண்டே அணி  தரப்பில் மும்பை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகார் தெரிவித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கருத்து தெரிவித்த போது சட்டப்பூர்வமான விளக்கங்களை பெற்ற பிறகு இந்த புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கட்சியின் வங்கி கணக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Edited by Mahendran