திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (12:57 IST)

காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்! – ஜமாய்த்த ஜார்கண்ட் இளைஞர்!

ஜார்கண்டில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை காதலித்து இருவரையுமே திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு திருமணம் என்பதே எட்டாக்கனியாக இருந்து வருகிறது. பெண்களின் அதிகமான சம்பள எதிர்பார்ப்புகள் மற்றும் செட்டில்மெண்ட் காரணமாக பலரும் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்யும் நிலையும் உள்ளது.

ஆனால் ஜார்கண்ட் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து ஒரே நாளில் இருவரையும் திருமணம் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லோஹர்தாகாவை சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் காதலித்து வந்துள்ளார்.

இதனால் இளைஞரின் காதலிகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு இது கிராம பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது. அங்கு இளைஞரிடம் கேட்டபோது இரண்டு பெண்களை விட்டு பிரிய மனமில்லை என கூறியுள்ளார். இரு பெண்களுமே சந்தீப்பை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் கடைசியாக கிராம பஞ்சாயத்தில் இரண்டு பெண்களையுமே சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்து அந்த சமயமே திருமணமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.