திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 3 மே 2017 (18:20 IST)

மோடிக்கு 1கி.மீ. நீளத்தில் கடிதம் அனுப்பிய மாணவர்கள்

எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்திரப்பிரதேச பள்ளி மாணவர்கள் 1கி.மீ. நீளத்தில் கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
காஷ்மீர் எல்லையில் பாகீஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த இளநிலை அதிகாரி மற்றும் தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
 
இந்த சம்பவதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரேதச மாநிலம்ம் மொராதாபாத்தில் உள்ள பள்ளி மாணவர்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
 
1கி.மீ. நீளம் கொண்ட கடிதத்தை எழுதியுள்ளனர். அதில், எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி குறிப்ப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் தாக்கப்பட்டதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்ததை விரைவில் மோடிக்கு அனுப்ப உள்ளனர்.