1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (12:32 IST)

ஃப்ரெஷ்ஷான காய்கறிம்மா.. வாங்க! – உத்தரபிரதேசத்தில் காய்கறி விற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி!

உத்தர பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் சாலையில் அமர்ந்து காய்கறி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் போக்குவரத்து துறையின் செயலாளராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா. சமீபத்தில் அகிலேஷ் மிஸ்ரா ப்ரயாக்ராஜ் பகுதியில் சாலை ஓரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அகிலேஷ் மிஸ்ரா “காய்கறி விற்றதற்கு தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. அவ்வழியாக சென்றபோது காய்கறி விற்றுக் கொண்டிருந்த பெண் குழந்தையை கவனிக்க வேண்டும் என கேட்டதால் சிறிது நேரம் கடையை பார்த்துக் கொண்டேன்” என கூறியுள்ளார்.