திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 டிசம்பர் 2020 (08:17 IST)

சாதி பெயர்களை வாகனங்களில் ஒட்டினால் பறிமுதல்! – உத்தர பிரதேசத்தில் திடீர் சட்டம்!

உத்தர பிரதேசத்தில் வாகனங்களில் சாதி பெயர்களை ஒட்டினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வெளியாகியுள்ள உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தங்கள் சாதி பெயரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஒட்டி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வாகனங்களில் சாதி பெயரை ஒட்டுவது சமூக நல்லிணக்கத்திற்கே பங்கம் விளைவிப்பதாக மகராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் உத்தர பிரதேச போக்குவரத்து ஆணையர் சாதி பெயர் கொண்ட வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன.