புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (19:29 IST)

பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் விழா!

kerala
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே பெண்கள் வேடம் அணிந்து ஆண்கள் பங்கேற்ற திருவிழா நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள கொல்லம் மாவட்டத்திலுள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மலையாள மீனம் மாதத்தில், சமய விளக்கு  நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பது வழக்கம். அதாவது, பெண்கள் வேடமிட்டு, வேண்டுதல் செய்வதன் மூலம் வேண்டுதல்  நிறைவேறும் என்றும், வீட்டில் செல்வம் பெருகும் என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால், இக்கோயில்லு ஆண்கள் பங்கேற்று வருகின்றனர். இக்கோயில் வாசலில், ஆண்களுக்கு பெண்வேடமிட ஒப்பனைக்கலைஞர்கள் வருகை புரிவர்.

இதில், சிறப்பாக ஒப்பனை செய்த ஆண்களுக்குப் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.