செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (13:42 IST)

19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்: சாலையில் உயிரிழந்த பரிதாபம்

19 வயது இளம்பெண்ணை பேருந்தில் இருந்து தூக்கியெறிந்த கொடூரம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரனோ சந்தேகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் சென்ற இளம்பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம் அடைந்த சக பயணிகள் அவரை தூக்கி வெளியே இருந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது அன்சிகா தனது தாயாருடன் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகள் ஒரு பெரிய போர்வையை எடுத்து அதில் அன்சிகாவை மூடி அப்படியே தூக்கி வெளியே எறிந்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் 
 
இதுகுறித்து அந்த பேருந்தில் சென்ற அன்சிகாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்ததாகவும் ஆனால் அன்சிகாவின் சகோதரர் பத்திரிகைகளில் இது குறித்து பேட்டி கொடுத்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது
 
தற்போது அந்த பேருந்தில் இருந்து அன்சிகாவை தூக்கி எறிந்தவர்களை போலீசார் தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கொரோனா சந்தேகத்தால் தூக்கி எறியப்பட்ட19 வயது இளம்பெண் அன்சிகாவுக்கு கொரோனா உள்பட எந்தவிதமான நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது