வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (06:06 IST)

ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உபி முதல்வர் அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து நேற்று மேலும் ஒரு அதிரடி உத்தரவாக 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 138 உயர் அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.



 


பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் சகஜமே. ஆனால் இப்படி ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆதித்யநாத் பதவியேற்றவுடன் ஒருமுறை அதிகாரிகள் மாற்றம் நடந்த நிலையில் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கை அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.