திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (08:29 IST)

இனி ஆதார் விவரங்களை மாற்றவும் கட்டணம்! – யுஐடிஏஐ அறிவிப்பு!

நாடு முழுவதும் குடிமக்களின் பல்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியமாய் அமைந்துள்ள ஆதார் கார்டில் விவரங்களை மாற்ற கட்டணம் செலுத்தும் முறையை யுஐடிஏஐ அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்குவது தொடர்ந்து அனைத்து வித பரிவர்த்தனை மற்றும் அடையாள சான்றுகளில் ஆதார் கார்டு அவசியமாகி உள்ளது. இந்நிலையில் ஆதார் விவரங்களில் தவறுகள் நேர்ந்தால் உரிய ஆவணங்களை கொண்டு இலவசமாக சரிசெய்து கொள்ளும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஆதார் இணைப்பை நிர்வகிக்கும் யுஐடிஏஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை இலவசமாக மேற்கொள்ளப்பட்ட திருத்த பணிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய ரூ.50ம், பயோமெட்ரிக் ரேகை உள்ளிட்டவற்றை மாற்ற ரூ.100ம் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.