திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (12:41 IST)

மக்களவைத் தோ்தல் எதிரொலி: ‘க்யூட்-யுஜி’ தோ்வு தேதிகள் மாற்றப்படுகிறதா?

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேதியை பொறுத்து மத்திய பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான க்யூட் யூஜி தேர்வு தேதி மாற வாய்ப்பிருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது 
 
இது குறித்து பல்கலைக்கழக மானிய தலைவர் ஜெகதீஷ் குமார் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது மக்களவைத் தேர்தல் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டுக்கான மே 15 முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்பட்டு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த தேதியில் தேர்தல் அறிவிப்பு வெளியானால் தேர்வு தேதி மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு நடத்தப்படுமா அல்லது தேர்வு தேதி மாற்றப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva