திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (12:07 IST)

தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! புதிய தேதி என்ன?

தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வு தேதி மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாதம் 16 ஆம் தேதி நெட் தேர்வு  நடைபெறுவதாக இருந்த நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வும் அதே தேதியில் நடைபெற உள்ளது.

எனவே இரண்டு தேர்வையும் எழுதும் தேர்வர்கள் ஒரு தேர்வை மிஸ் செய்ய வேண்டிய இருந்ததால் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வு தேதி மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி நெட் தேர்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு தேசியத் தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வ  எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இ

இந்த தேர்வு குறித்து கூடுதல் விவரங்களுக்கு: http://www.nta.ac.in , [email protected] என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது 011 40759000 என்ற எண்ணை தொடர்புகொண்டு தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva